ஏதாவது சொல்லுங்களேன்.. நச்சரித்த விக்ரம் ரசிகர்கள்! சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!!karthik-subbaraj-update-about-chiyaan-60-movie

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் சியான் 60. மேலும் இத்திரைப்படத்தில் வாணி போஜன், சிம்ரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இப்படத்தை லலித்குமார் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். சியான் 60 படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் திடீரென அவர் விலகிய நிலையில்  சந்தோஷ் நாராயணன் அப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அப்பாவும் மகனும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Karthik subbaraj

 இந்தநிலையில் சியான் 60 படம் குறித்து ஏதேனும் அப்டேட் கொடுங்களேன் என ரசிகர்கள் தொடர்ந்து நச்சரித்து வந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது,  சியான் 60 படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், ஊரடங்கு முடிவடைந்த உடனே  படப்பிடிப்பை தொடங்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் முதலில் விக்ரம், வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.