கடும் மூச்சு திணறலால் அவதி! தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் கார்த்திக்! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!!karthick-affected-by-heavy-breathing-problem

தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலகட்டங்களில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகராக நவரச நாயகனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் கார்த்திக். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. மேலும்  நடிகர் கார்த்திக் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகவும் வலம்வந்தார். 

அதனைத் தொடர்ந்து சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்து வந்த நடிகர் கார்த்திக் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கிடையில் நடிகர் கார்த்திக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

karthik

பின்னர் உடல்நலம் சற்று தேறிய நிலையில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சில பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கு தற்போது மூச்சு திணறல்  அதிகமாகியுள்ளதாகவும், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.