சினிமா

அசத்தலான புகைப்படத்துடன், சுல்தான் படம் குறித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட சூப்பர் பதிவு! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

நடிகர் கார்த்தி சுல்தான் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அதுகுறித்து உற்சாகத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

தமிழ் படங்கள் எதிலும் நடிக்காத நிலையிலும் ரஷ்மிகா மந்தனாவிற்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில் அவர் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம்  தயாரிக்கும் இப்படத்திற்கு 
விவேக்- மெர்வின்  இசையமைத்துள்ளார். 

இதன் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தநிலையில், கொரோனா ஊரடங்கால்  பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் சூட்டிங் தொடங்கப்பட்டு சுல்தான் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஷூட்டிங் முடிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் இந்த கதையின் ஐடியாவை கேட்ட நாளில் இருந்தே, இந்த கதை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனது பெரிய தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. சிறப்பாக உழைத்த மொத்தப் படக்குழுவுக்கு நன்றி என கூறியுள்ளார்.


Advertisement