சினிமா

கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபல நடிகரா! - வெளியான புதிய அப்டேட்.

Summary:

Karthi subraj-dhanush

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களை எடுத்தவர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய மூன்று படங்களும் திரை விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டவை.

 சமீபத்தில் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தனுஷ்சை வைத்து  படம் ஒன்றை  இயக்கவுள்ளார், இப்படம் முழுவதும் லண்டனில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர் பார் தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிகின்றது.


Advertisement