வித்தியாசமான புதிய லுக்கில் கார்த்தி.! இது எந்த படத்திற்கு தெரியுமா?? இணையத்தை கலக்கும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!

வித்தியாசமான புதிய லுக்கில் கார்த்தி.! இது எந்த படத்திற்கு தெரியுமா?? இணையத்தை கலக்கும் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!!


Karthi japan movie first look Viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்  போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. மேலும் கார்த்தி சர்தார் படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படம் ஜப்பான்.

Karthi

இதனை ஜோக்கர் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற ராஜுமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருக்கிறார். ஜப்பான் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜப்பான் பட புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். அது வைரலாகி வருகிறது.