அட.. கப்பீஸ் பூவையாரா இது! நல்லா வளந்து ஹீரோ ரேஞ்சில் இருக்காரே! ஆச்சர்யத்தில் ஆழ்த்திய புகைப்படம்!!kappees-poovaiyar-latest-photos-viral

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் பூவையார். 

கப்பீஸ் என்ற செல்லப் பெயருடன் வலம் வந்த அவர் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். மேலும் அவர் பெருமளவில் பிரபலமடைந்த நிலையில் தமிழ்சினிமாவிலும் பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி பூவையார் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Poovaiyar

பூவையார் தற்போது நன்கு வளர்ந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த நிலையில் அவர் ஹீரோ ரேஞ்சில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் கப்பீஸ் பூவையார் நன்கு வளர்ந்துட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.