தாலியை திருடிட்டாங்க.! கதறி கதறி அழுத சினேகனின் மனைவி! வருத்தத்துடன் அவரே பகிர்ந்த தகவல்!!



kannika-snegan-shares-about-love-story

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் 2500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி பிரபல பாடலாசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகை கன்னிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

சினேகன் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் அவரை நினைத்து கன்னிகா அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் காதல் கவிதைகளை வெளியிட்டு வந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்பொழுது அவர் அது தாலி திருடு போன விஷயம் குறித்து கூறியுள்ளார்.

Kannika

கன்னிகா சினேகனிடம் தனது காதலை கூறியது குறித்து பல பேட்டிகளில் பகிர்ந்திருந்தார். முதன் முதலாக சினேகனே தனது காதலை கன்னிகாவிடம் கூறியுள்ளார். பின்னர் ஐந்து மாதம் கழித்து கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வைத்து அதன் ஒளியில் கன்னிகா தனது காதலை சினேகனிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் போய் ப்ரபோஸ் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த தாலியை இருவரும் பொக்கிஷமாக பாதுகாத்து வந்துள்ளனர். ஒருநாள் அந்த தாலி திருட்டு போய்விட்டது. அதை தாங்கிக்கொள்ள முடியாமல் கன்னிகா தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாராம். அதுகுறித்து அவர் அண்மையில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.