ரொம்ப பீல் பண்றாரே.. திருமணமான 6 மாதத்திலேயே காதல் கணவரின் பிரிவு! தவிக்கும் சினேகன் மனைவி! வைரல் பதிவு!!

ரொம்ப பீல் பண்றாரே.. திருமணமான 6 மாதத்திலேயே பிரிவு! தவிக்கும் சினேகன் மனைவி! வைரல் பதிவு!!


kannika-ravi-post-about-snegan-missing

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவிஞர் சினேகன். அவர் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சினேகன் தனது நீண்ட நாள் காதலியான தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை நடிகையான கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவரும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது திருமணமான 6 மாதங்களிலேயே  தனது காதல் மனைவியை பிரிந்து சினேகன் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரது பிரிவால் வாடும் கன்னிகா, ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’ என்ற பாடலின் வரிகளை புகைப்படத்துடன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.