சினிமா

காதலிக்கும் போது சினேகனுடன் எடுத்த முதல் புகைப்படத்தை வெளியிட்ட கன்னிகா! அடேங்கப்பா.. எப்போ எடுத்துள்ளனர் பார்த்தீங்களா!!

Summary:

தமிழ்சினிமாவில் 
700-க்கும் மேற்பட்ட படங்களில் 
ஏறக்குறைய 2500 ஹிட் பா

தமிழ் சினிமாவில் 
700-க்கும் மேற்பட்ட படங்களில் 
ஏறக்குறைய 2500 ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனை தொடர்ந்து அவர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சினேகன் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். 

மேலும் அவர் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் இணைந்துள்ளார். இந்நிலையில் சினேகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை கன்னிகா ரவியை நடிகர் கமல் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.அதனைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 இந்த நிலையில் கன்னிகா தனது ட்விட்டர் பக்கத்தில், காதலிக்கும் போது தான் சினேகனுடன் முதன்முதலாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது. எங்களுடைய முதல் புகைப்படம் 2014 ஆம் ஆண்டு எடுத்தது.  வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க. கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement