சினிமா

கண்ணான கண்ணே வைரல் பாடகர் கொரோனாவால் பாதிப்பு! தனது இசையால் மற்ற நோயாளிகளை மகிழ்வித்து அசத்தல்!

Summary:

Kannana kanne thirumoorthy affected by corono

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நொச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமால் என்பவரது மகன் திருமூர்த்தி. பிறவியிலேயே பார்வையில்லாத இவர் மிகுந்த இசைத்திறன் கொண்டவர். கைகளில் கிடைக்கும் பொருள்களையெல்லாம் வைத்து இசையெழுப்பி அதற்கேற்றாற்போல் பாடல்களைப் பாடுவார். 

மேலும் இவர் விசுவாசம் படத்தில் டி. இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய கண்ணான கண்ணே பாடலை பாடியிருந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி அவர் பெருமளவில் பிரபலமானார்.  இதனை கேட்ட இசையமைப்பாளர் டி.இமான் அந்த இளைஞரை நேரடியாக தொடர்பு கொண்டு பாடும் வாய்ப்பு கொடுத்தார்.

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள முகாமில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அங்கு அவருடன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில் திருமூர்த்தி பாடல்களைப் பாடி முகாமில் இருக்கும் அனைவரையும்  மகிழ்வித்து வருகிறார்.


Advertisement