சினிமா

அடேங்கப்பா.. கண்ணான கண்ணே சீரியல் நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா! அப்படியே அவரை மாதிரியே இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி பிரபலமாகி வரும் தொடர் கண்ணான கண்ணே. இந்த தொடரில் கதாநாயகிகளுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நித்யா தாஸ்.

மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த அவர் தமிழில் பொன்மேகலை, மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தாவிய அவர் தமிழில் இதயம், பைரவி ஆவிகளுக்கு  பிரியமானவள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நித்யா தாஸ் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் கண்ணான கண்ணே நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா! அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரு என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement