சினிமா

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நாயகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... வைரல் புகைப்படம்..

Summary:

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நாயகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... வைரல் புகைப்படம்..

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் நாயகி விஷாகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர்கள் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், சேதுராமன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. படத்தின் நாயகியை நண்பர்கள் மூன்றுபேரும் காதலிப்பதும், அதற்காக அவர்கள் படும் பாட்டையும் காமெடியாக உருவாக்கி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது.

இந்த படத்தின் நாயகியாக விஷாகா நடித்திருப்பார். அதற்கு முன்னதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும், கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமாக்கியது. ஆனால் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு இவரை பெரிதாக எந்த படங்களிலும் காணவில்லை.

இந்நிலையில் அம்மணி மீண்டும் சினிமா வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்பு நடிகை விஷாகா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதை பார்த்த நெட்டிசன்களும் என்னம்மா..இப்படி கவர்ச்சி காட்டுறிங்களேம்மா என பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement