சினிமா பிக்பாஸ்

பிக்பாஸில் இவர் ஜெயிச்சாதான் ரொம்ப நல்லாருக்கும்!! ஷாக் கொடுத்து பிரபல நடிகர் அதிரடி கருத்து!!

Summary:

kankjakaruppu talk about bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் ரசிகர்களை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செயல்பட்டு வருகிறது பிக்பாஸ் குழு.  

bigg boss cheran க்கான பட முடிவு

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக்பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு எந்த பஞ்சமுமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை கஞ்சா கருப்பு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்பொழுது அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என கேட்டததற்கு அவர் எனக்கு சரவணன் அண்ணன் மற்றும் சேரன் அண்ணண் இருவரையும்  ரொம்ப நல்லா தெரியும். சேரன் மிகவும்  நல்லவர்.ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார். அவர் ஜெயித்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்


 


Advertisement