குக் வித் கோமாளி பைனல் முடிஞ்சாச்சா!! அட.. இவர்தான் வின்னரா? சர்பிரைஸில் ரசிகர்கள்!!Kani is the winner in cook with comali

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. முதல் விட தற்போது ஒளிபரப்பாகி வரும் 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் தவறாமல் பார்த்து வருகின்றனர்.

 அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களான கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும் பாலா, புகழ் சிவாங்கி, சரத், மணிமேகலை ஆகியோர் கோமாளிகளாக சேட்டைகள் செய்து வந்தனர்.

cook with comali

இந்த நிலையில் குக் வித் கோமாளி இறுதி போட்டிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதில் கனி முதலிடத்தை பெற்றதாகவும், ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தைப் பெற்றதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.