சூப்பர் ஸ்டாருடன் மோதும் சூர்யா!! ஜெயிக்க போவது யார் பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்... கங்குவா ரிலீஸ் தேதி அறிவிப்பு!!Kanguvaan release date updates

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்தியா முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.

Kanguvaan

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் அதே தேதியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் எந்த படம் வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போது முதலே எழுந்து வருகிறது. 

இதையும் படிங்க: நடிகை மிர்னாலினியா இது... என்ன இப்படி போஸ் கொடுத்துள்ளாரே... புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

இதையும் படிங்க: வெறித்தனம் வெறித்தனம்... ஜிம்மில் ரம்யா பாண்டியனின் ஒர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்... வீடியோ இதோ!!