உங்கள் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளிக்காதீர்கள்.. அனிமல் பட இயக்குனரை விமர்சித்த கங்கனா!kangana-ranawat-reply-to-sandeep-vanga

தெலுங்கில் விஜய்தேவர் கொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் இதுவரை மொத்தமாக 900 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Animal

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ஆணாதிக்கத்தை தன்னுடைய திரைப்படங்களில் பெருமையான விஷயமாக காட்டுகிறார் என அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.  ஆனால், நான் விமர்சனங்களைக் கண்டுகொள்வது கிடையாது என சந்தீப் வங்கா கூறியுள்ளார். 

Animal

இந்த நிலையில் பாலிவுட் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடும் விமர்சனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கங்கனாவின் விமர்சனத்தை காமெடியாக எடுத்துக்கொண்ட சந்தீப், உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருந்தார். 

இதனையடுத்து அதற்கு பதில் அளிக்கும் விதமாக கங்கனா ரனாவத் 'சந்தீப் என்னுடைய விமர்சனத்தை சிரிப்பை பதிலாக கொடுத்து நக்கல் செய்திருந்தார். இதன் மூலம் அவர் ஆணாதிக்க மனப்பாண்மையுள்ள படங்களை இயக்குபவர் மட்டுமல்ல, அவரே அப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்தான் என தெரிகிறது. எனக்கு தயவு செய்து உங்கள் படத்தில் வேடம் கொடுத்து விடாதீர்கள். ஏனென்றால் அப்புறம் உங்கள் கதாநாயகர்கள் பெண்ணியவாதிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உங்கள் படங்கள் பாதிக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.