ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பிரபல நடிகைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி..!! 

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பிரபல நடிகைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி..!! 


Kangana ranavath infected dengu fever

நடிகை கங்கனா ரணாவத் "தாகத்" திரைப்படத்தை தொடர்ந்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் "எமர்ஜென்சி". இப்படம் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார்.

Kangana ranavath

இப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை படக்குழு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமின்றி, கங்கனா படப்பிடிப்பு தளத்தில் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது. மேலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.