சினிமா

நான் ஜெயிலுக்கு செல்ல காத்திருக்கிறேன்! நடிகை கங்கனா வெளியிட்ட அதிரடி பதிவு! செம ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

நடிகை கங்கனா ரனாவத் தான் ஜெயிலுக்கு போக தயாராக உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுஷாந்த்  சிங் தற்கொலைக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின்  ஆதிக்கம் மற்றும் போதை பொருள் புழக்கம் போன்றவைதான் காரணம் என குற்றம்சாட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியவர் நடிகை கங்கனா ரனாவத்.

மேலும் அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், தாலிபான் தீவிரவாதிகளை போல ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில்  மும்பை மாநகராட்சி, பாந்திராவில் உள்ள கங்கனாவின் அலுவலக பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி இடித்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் போராடி தொடர்ந்து இடிப்பதற்கு தடை அனுமதி பெற்றார்.

மேலும் மும்பையில் இருந்து வெளியேறிய பிறகும் கங்கனா தொடர்ந்து மராட்டிய அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்தார். இந்த நிலையில் மும்பை போலீசார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போன்றவர்களை வணங்குகிறேன். அரசு என்னை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறது. அது எனது தேர்வுகள் குறித்து எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, விரைவில் சிறைக்கு செல்ல காத்திருக்கிறேன். சிறையில் நான் வணங்கும் தலைவர்கள் அனுபவித்த துயரங்கள் எனது வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுக்கட்டும். ஜெய்ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.


Advertisement