சினிமா

சமந்தா- நாக சைதன்யா பிரிய இதுதான் காரணம்! பிரபல நடிகரை சீண்டி கொந்தளித்து போன நடிகை கங்கனா ரனாவத்!!

Summary:

சமந்தா- நாக சைதன்யா பிரிய இதுதான் காரணம்! பிரபல நடிகரை சீண்டி கொந்தளித்து போன நடிகை கங்கனா ரனாவத்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்தும் அவர் ஏராளமான படங்களிலும் வெப் சீரியல்களிலும் சமந்தா நடித்து வந்தார்.

இதற்கிடையில் சமீபகாலமாக சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிய உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் அண்மையில் இருவரும் பிரிய உள்ளதை அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக பக்கத்தில் தெரிவித்திருந்தனர். இவர்களது விவாகரத்து குறித்து விமர்சித்து கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், எப்போது விவகாரத்து நடைபெற்றாலும் ஆண்கள் மேல்தான் தவறு இருக்கும். நான் சொல்வது பழமைவாதமாகவோ அல்லது முன்அனுமானம் செய்வது போலவோ இருக்கலாம், ஆனால் அப்படித்தான் கடவுள் ஆண், பெண்ணை வடிவமைத்துள்ளார். 
பெண்களை ஆடைகளை போன்று பயன்படுத்தி எறிந்து விட்டு பின்னர் தாங்கள் நண்பர்கள் போல் என்று கூறும் ஆண்களிடம் கனிவு காட்டுவதை நிறுத்துங்கள். நூற்றில் ஒரு பெண் தவறு செய்யலாம். மேலும் ரசிகர்களும், ஊடகங்களும் இதுபோன்ற நடிகர்களை ஊக்குவிப்பது வெட்கக்கேடானது. அவர்கள் நடிகர்களை புகழ்ந்து பெண்களை தவறாக சித்தரிக்கிறார்கள். இதுபோன்ற விவாகரத்து என்பது முன்பை விட அதிகமாக வளர்ந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் மற்றொரு பதிவில், பிரபல தென்னக நடிகர் ஒருவர், 4 வருடங்களாக திருமண வாழ்க்கையில் இருந்த பெண்ணை சமீபத்தில் விவாகரத்து செய்துள்ளார். இவர் பாலிவுட்டின் 
விவாகரத்து நிபுணர் என்று அறியப்படுவார். அவர் பல பெண்களின், குழந்தைகளின் வாழ்க்கையைப் பாழாக்கியுள்ளார். அப்படிப்பட்டவர் தற்போது நாக சைதன்யாவுக்கு பாலிவுட்டில் வழிகாட்டும் ஒளியாகியுள்ளார். எனவே எல்லாம் எளிதாக முடிந்துவிட்டது என்று பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானையும் சீண்டி பதிவிட்டுள்ளார்.


Advertisement