சினிமா

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? இத்தனை கோடியா?

Summary:

kangana ranaut one movie salary crossed 14 crores

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நடித்த அணைத்து படங்களுமே வெற்றிதான். விரைவில் இவர் அவரது காதலர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரியங்கா சோப்ரா இப்பொழுது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்து வருகிறார். இவரது சம்பளம் எவ்வளவு என்று பார்த்தால் 13 கோடியாம். இதற்கு முன்னதாக தீபிகா படுகோன் 13 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான க்வீன் திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றிபெற்றது. அதுமட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது இந்த திரைப்படம். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார் கங்கனா. இதன்மூலம் தனது சம்பளத்தையும் 14 கோடியாக உயர்த்தி இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.


Advertisement