9ம் தேதி வருகிறேன்! முடிஞ்சதை செய்யுங்கள்! தில்லாக சவால் விடுத்த நடிகை கங்கணா! ஏன் தெரியுமா?

9ம் தேதி வருகிறேன்! முடிஞ்சதை செய்யுங்கள்! தில்லாக சவால் விடுத்த நடிகை கங்கணா! ஏன் தெரியுமா?


Kangana challeged to mumai politicians

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டினர். மேலும் சுஷாந்த்  தற்கொலைக்கு பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களின்  ஆதிக்கம் மற்றும் போதை பொருள் பழக்கம் போன்றவைதான் காரணம் என நடிகை கங்கணா குற்றம்சாட்டினார்.

 மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், தாலிபான் தீவிரவாதிகளை போல ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மும்பையை பாதுகாப்பற்ற நகரம் எனவும் கூறியிருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.

kangana

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மகராஷ்டிராவையோ, மும்பையையோ பாதுகாப்பில்லாததாக கருதுவோர் இங்கு வசிப்பதற்கு தகுதியற்றவர்கள் என கூறியிருந்தார். மேலும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா மராட்டியத்தையும் மும்பை போலீசையும் அவமானப்படுத்தியுள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை கங்கனா,  என்னை மும்பை வரக்கூடாது என பலரும் அச்சுறுத்துகிறார்கள். ஆனால் வரும் 9ந்தேதி நான் மும்பை வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள் என தில்லாக சவால் விடுத்துள்ளார்.