பொங்கலுக்கு குறிவைக்கும் கமல் - மணிரத்னம் கூட்டணி.. வெளியான தகவல்.!Kamalhasan in 234 movie release on 2025 Pongal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமலஹாசன். தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

kamalhasan

அதன்படி கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாக உள்ள கமல்ஹாசனின் 234வது திரைப்படத்திற்கு 'தஃக் லைஃப்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்போடு ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் கௌதம் கார்த்திக், அபிராமி உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் படிப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

kamalhasan

மேலும், இந்த திரைப்படத்தை 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே கமல்ஹாசன் இந்தியன் 2 மற்றும் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் தடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.