தமிழகம் விளையாட்டு

தமிழ் வீரமே வாகை சூடும்.. புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்! யாருக்கெல்லாம் பார்த்தீர்களா!!

Summary:

டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு நடிகர் க

டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நகர் டோக்கியோவில் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது நடைபெறவிருக்கும் பல விதமான போட்டிகளுக்கும் இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்களும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர்களுடன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் கலந்துரையாடி வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் அத்தகைய புகைப்படத்தை  சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும் என வாழ்த்தியுள்ளார்


Advertisement