சினிமா

மருதநாயகம் படத்தில் கமலுக்கு பதில் இந்த பிரபல ஹுரோ தான் நடிக்கவுள்ளாரா! வெளியான புதிய தகவல்.

Summary:

Kamal vikram maruthanayagam

நடிகர் கமலின் பிறந்தநாள் நேற்று உலக ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கமலின் கனவு படமான மருதநாயகம் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் நடைப்பெற்ற பிரஸ்மீட்டில் கமல் மருதநாயகம் படம் பற்றி பேசியுள்ளார்.

அதில் மருதநாயகம் படம் கண்டிப்பாக திரைக்கு வரும். ஆனால் அந்த படத்தில் நான் நடிப்பது தான் சந்தேகம் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இருந்தாலும் அவருக்கு பதில் அந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

நடிகர் விக்ரம் இதற்கு முன்பு கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலு‌ம் கமல் கம்பெனி தயாரிப்பில் மேலும் ஒரு படத்தில் நடத்து வருகிறார். தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து படத்தில் நடித்து வருகிறார். எனவே இன்னும் சில நாட்களில் மருதநாயகம் படம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement