சினிமா

மீண்டும் உருவாகவுள்ளதா மருதநாயகம்.! மருதநாயகம் பற்றி நடிகர் கமல் கூறிய சுவாரஸ்ய தகவல்..!

Summary:

Kamal told about maruthanayakam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக  நாயகன் கமல் ஹாசன். இவர் நடிப்பு மட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் கமல் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மருதநாயகம் படம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு நடிகர் கமல் மருதநாயகம் திரைப்படத்தை புத்தகமாக வெளியீட வேண்டுமென்றால் உடனே செய்து விடலாம்.

ஆனால் படமாக எடுக்க பணம் தேவைப்படுகிறது. எனவே பண தேவையை பூர்த்தி செய்த பிறகு மருதநாயகம் உருவாகும். மேலும் நான் உருவாக்கிய மருதநாயகத்திற்கு வயது 40. எனவே என்னால் அதில் நடிக்க முடியாது. எனவே வேறு சில நடிகரை நடிக்க வைக்க வேண்டும். இல்லையென்றால் கதையை தான் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். 


Advertisement