என்னவொரு அளவில்லா அன்பு!! மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட மாஸ் வீடியோ! நெகிழ்ச்சியுடன் உணர்ச்சி பொங்க நன்றி கூறிய நடிகர் கமல்!kamal-thank-logesh-ganagaraj-to-wished-him

1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பீம்சிங் இயக்கத்தில் வெளியான திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகர் கமல். அதனைத் தொடர்ந்து அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில், தோற்றங்களில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது உலக நாயகனாக கொடிகட்டி பறக்கிறார்.மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் இன்றுடன் கமல் திரையுலகிற்கு அறிமுகமாகி 61 ஆண்டுகள் ஆகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் 
மேலும் சத்யா' படத்தில் இடம்பெற்ற 'போட்டா படியுது' என்ற பாடல் வேறு நடிகர்களைக் கொண்டு மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை சிம்பா பட இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ளார். மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் கமலுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

 இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் நெகிழ்ந்துவிட்டேன். இது வெறும்  பழைய அழகான நினைவுகள் மட்டுமல்ல. இது நிபந்தனையற்ற அன்பு. இதற்காக நான் திருப்பி தரவேண்டிய பரிசும், அதே அன்பு மட்டுமே. உங்களுடைய அன்பிற்கு நன்றி. என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான் என பதிவிட்டுள்ளார்