கமல் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்! ஷாக்கில் கண்கலங்கிய ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!

கமல் கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்! ஷாக்கில் கண்கலங்கிய ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ!!


kamal-surprise-to-fan-video-viral

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் உலக நாயகன் கமல். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். தற்போது அவரது நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. விக்ரம் படம் வரும் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

 படம் வெளியாவதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது கமல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்கள் கமல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கமல் திடீரென முன் தோன்றியுள்ளார். அப்பொழுது உணர்ச்சி பெருக்கில் அவர்கள் கண்ணீர் விட்டு கலங்கியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.