சினிமா

ரஜினியின் திரைப்பட டைட்டிலை தவறாக புரிந்து கொண்ட கமல்.. பின் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவம்.!

Summary:

Kamal misunderstanding the rajini movie title

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவருக்கும் தனிதனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் இரு தூண்கள் என்றே செல்லலாம்.

இந்நிலையில் தற்போது இவர்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கமல் பாடலாசிரியர் வைரமுத்துவை சந்தித்த போது ரஜினி நடிக்கும் படத்தின் டைட்டில் என்ன என கேட்டுள்ளார். அதற்கு அவர் தளபதி என்று கூறியுள்ளார்.

என்னது கணபதியா, டைட்டில் நல்லவே இல்லை. ஏதே விநாயகர் சதுர்த்தி போல் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்பின் கணபதி இல்லை தளபதி என்று கூறியதும் கமல் டைட்டில் நன்றாக உள்ளது என கூறியுள்ளார். 


Advertisement