KH234: கமல் ஹாசனின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான், திரிஷா.. அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு..!

KH234: கமல் ஹாசனின் படத்தில் இணைந்த துல்கர் சல்மான், திரிஷா.. அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு..!



Kamal Hassan 234 Movie Dulqar Salman Join Hands 

 

மணிரத்தினம் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாக உள்ள திரைப்படம் KH234. 

இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் தலைப்பு இன்று வெளியாவதாக தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது. 

இந்நிலையில், படத்தில் நடிகர் துல்கர் சல்மான் , திரிஷா இணைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இன்று மாலை ஐந்து மணி அளவில் படத்தின் தலைப்பும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை மெட்ராஸ் டால்கிஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.