சினிமா

ஆரம்பிக்கலாங்களா.. தேர்தல் முடிஞ்ச கையோடு களத்தில் இறங்கிய கமல்! செம சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் கைதி, மாநகரம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் புகழ் பெ

தமிழ் சினிமாவில் கைதி, மாநகரம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் பெருமளவில் புகழ் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இறுதியாக விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல் நடிப்பில் விக்ரம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் டீசர்  கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து கமல் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.

மேலும் இதற்கிடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் குணமடைந்த அவர் சமீபத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்கு பின் விக்ரம் படப்பிடிப்பு தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆரம்பிக்கலாங்களா என கேட்டுள்ளார். இந்நிலையில் கமல் நடிப்பில் விக்ரம் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement