கல்கி படத்தின் புஜ்ஜி கதாபாத்திர அறிமுக வீடியோ; மாஸ் காண்பித்த நடிகர் பிரபாஸ்.!Kalki AD 2898 Movie Bujji Introducing 

 

இந்திய அளவில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் கல்கி திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், துல்கர் சல்மான், திஷா பெதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். 

ரூ.600 கோடி செலவு

ரூ.600 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவுபெற்று வெளியீடு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: 12 வயதிலேயே ஆபாச தளத்தில் லீக்கான போட்டோ - நடிகை ஜான்வி கபூர் ஓபன்டாக்.!

பல மொழிகளில் வெளியாகிறது

வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகவுள்ள கல்கி திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது. 

புஜ்ஜி அறிமுகம்

இந்நிலையில், கல்கி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள புஜ்ஜி என்ற கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், மாஸ் ஆக்சன் காட்சியின்போது புஜ்ஜியின் தோற்றம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனை நீங்கள் கீழுள்ள வீடியோவில் கண்டுகளியுங்கள்.

புஜ்ஜி கதாபாத்திர அறிமுகம் மற்றும் கல்கி படத்தின் விளம்பர பணியில் கலந்துகொண்ட நடிகர் பிரபாஸ், திரைப்படத்தின் காட்சிகளை போல நிகழ்ச்சியில் தோன்றி அசத்தினார்.

இதையும் படிங்க: #Breaking: நடிகர் ஷாருக்கானுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி?.!