ஸ்மார்ட் ஹீரோவான பெரிய காக்கா முட்டையை கவர்ந்த பிரபல இளம் நடிகை! அவரோட ஆசையை பார்த்தீர்களா!

ஸ்மார்ட் ஹீரோவான பெரிய காக்கா முட்டையை கவர்ந்த பிரபல இளம் நடிகை! அவரோட ஆசையை பார்த்தீர்களா!


kakkamuttai-vignesh-answered-fan-questions

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் காக்கா முட்டை. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

இதில் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் விக்னேஷ்.  இப்படத்தில் அவர் சிறப்பாக நடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. விக்னேஷ் அதனைத்  தொடர்ந்து அப்பா,  அப்பா 2, அறம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நன்கு வளர்ந்து இளைஞரான விக்னேஷ் சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ளார்.

Vignesh

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் நீங்கள் ஹீரோவாக நடித்தால் உங்களுக்கு ஜோடியாக யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்டதற்கு அவர் ஷிவானி என கூறியுள்ளார். மேலும் கவர்ச்சியாக இருப்பது யார். உங்களது கிரஷ் யார் என கேட்டதற்கும் அவர் ஷிவானி எனவே பதிலளித்துள்ளார்.

Vignesh

ஷிவானி பகல் நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். மேலும் லாக்-டவுனில் வீட்டில் இருக்கும் அவர் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.