#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
நல்லாவே நடிக்கிறாங்க.. குறும்படத்துடன் சாக்ஷியை கிண்டல்செய்து பிரபல நடிகை செய்த காரியத்தை பார்த்தீங்களா!!

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. மேலும் காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவ்வாறு அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் எதற்கும் பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கவின் மற்றும் சாக்ஷியின் காதல் விவகாரம் பரபரப்பை கிளப்பி, பெரும் பிரச்சினையாக வெடித்தது. மேலும் ஒவ்வொருவரும் தங்கள் பக்கம் உள்ள நியாயங்களை முன்னிறுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது .இதில் சாக்ஷி கவினை நாமினேட் செய்தார். மேலும் சாக்ஷி கவினுடன் ஒருமாதிரியும் மற்ற போட்டியாளர்களிடம் கவின் ஏமாற்றிவிட்டதாகவும் கூறி வந்துள்ளார்.
இவ்வாறு பிக்பாஸ் விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் சாக்ஷி குறித்து கவின் ரசிகர் ஒருவர் குறும்படம் ஒன்றை வெளியிட்டார். இந்தநிலையில் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகை காஜல் பசுபதி எந்த படத்துல நடிச்சாருனு தெரியல, ஆனால் பிக்பாஸ்ல நல்லாவே நடிக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
Yenda padathula nadichi irukanganu seriya terila 🐍 But I must agree gurl ... Neenga BB la nallavay nadikiringa 😀😂 https://t.co/k9fcejaTnQ
— Kaajal Pasupathi (@kaajalActress) 1 August 2019