சினிமா

நான் அப்படி நடிக்கவும் தயார்! ஆனா ஒரு கண்டிஷன்! மனம்திறந்த நடிகை காஜல்!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல பிரபலங்களின் படங்களில் ஹீரோயி

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல பிரபலங்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் கடந்த சில காலங்களுக்கு முன்பு கொரோனா லாக்டவுனில் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்தும் அவர் ஏராளமான படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது கணவரை 10 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு தெரியும். நாங்கள் ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் பழகினோம்.

பின்னர் அது காதலான நிலையில், இருவரும் லாக்டவுன் சமயத்தில் திருமணம் செய்து கொண்டோம். எங்க லவ் ஸ்டோரி வைத்து ஒரு படமே எடுக்கலாம். திருமணத்திற்குப் பிறகு எனது திரைப்பயணத்தில் என்ற மாற்றமும் இல்லை. எனக்கு காதல், சரித்திர மற்றும் நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம் உள்ளது. வில்லியாக நடிப்பதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எனக்கு கதை பிடித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Advertisement