சினிமா

நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா? மாப்பிள்ளை இவர்தானா? தீயாய் பரவும் தகவல்!

Summary:

Kajal got encagement spreading news

தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில்  நடித்து வருகிறார்.

அதனை தொடர்ந்து காஜல் கைவசம் தற்போது  ஷங்கர் இயக்கத்தில்  இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா,  ஹிந்தியில் ஹே சினாமிகா போன்ற படங்கள் உள்ளன. இந்த நிலையில் நடிகை காஜல் தொழிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் பரவிவந்தது. ஆனால் அதற்கு காஜல் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது  நடிகை காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபர் கெளதம் என்பவருடன் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் நிச்சயதார்த்தத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா சீனிவாஸ் கலந்து கொண்டுள்ளார் எனவும்  கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து காஜல் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement