மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ! அட.. காஜல் அகர்வால் இதெல்லாம் செய்யுறாரா.! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். இவருக்கென பெரும் ரசிகர்களும் உருவாகினர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்ற தொழிலதிபரை எளிமையாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் காஜல் படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் தான் ஒப்பந்தமான படங்களில் இருந்து விலகியுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அவ்வபோது தனது கர்ப்ப கால புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துக் கூறி தான் அன்றாடம் செய்யும் வேலைகளை, பொழுதுபோக்கினை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.