சினிமா

வருங்கால கணவருடன் முதன்முறையாக காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

நடிகை காஜல் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ள இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Happy Dussehra from us to you ! @kitchlug #kajgautkitched

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on


இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் வரும் அக்டோபர் 30 ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அவரே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகை காஜல் முதல் முதலாக தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

 


Advertisement