துளிகூட மேக்அப் இல்லாமல் காஜல் அகர்வால் எப்படி இருக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம் இதோ..

துளிகூட மேக்அப் இல்லாமல் காஜல் அகர்வால் எப்படி இருக்கிறார் பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படம் இதோ..


kajal agarwal photos without makeup

 தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

kajal

சமீபத்தில் காஜல் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் புரிந்தது. மேலும் அவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கொஞ்சம் கூட மேக் அப் இல்லாமல் காஜல் அகர்வால் விமானநிலையத்திற்கு வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது,

kajal