அடேங்கப்பா! வேற லெவல்தான்.. கணவருடன் நடிகை காஜல் அகர்வால் தொடங்கிய புதிய பிசினஸ்! என்னனு பார்த்தீங்களா!

அடேங்கப்பா! வேற லெவல்தான்.. கணவருடன் நடிகை காஜல் அகர்வால் தொடங்கிய புதிய பிசினஸ்! என்னனு பார்த்தீங்களா!


Kajal agarwal new business with husband

தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக  அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில்  கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

 அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது. 

 அதனைத் தொடர்ந்து தேனிலவுக்குச் சென்ற காஜல் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து புதிய பிசினஸ் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.  அதாவது kitched என்ற பிராண்ட் மூலம் வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளாராம். இதன் முதல்கட்டமாக வீட்டிற்கு தேவையான குஷன் சோபா ரகங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நடிகை காஜல் குடும்ப பிஸினசான நகை வியாபாரத்தில் பங்குதாரராக உள்ளார் என கூறப்படுகிறது. 

!