சினிமா

இந்தியன் பார்ட் 2: கமலுக்கு ஜோடி இந்த நடிகையா? புகைப்படம் உள்ளே!

Summary:

Kajal agarwal casting in indian part two

இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கலஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இந்தியன்.ற்றிகரமாக ஓடி வசூல் குவித்த திரைப்படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

தற்போது ரஜினி நடித்துவரும் 2.0 படத்தில் பிசியாக இருக்கிறார் இயக்குனர் சங்கர். 
2 . 0 பட வேலைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதால், அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த உள்ளார் ஷங்கர். ஏற்கனவே திரைக்கதை, வசனம் எழுதும் பணிகளை இவர் முடித்து விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

 
மேலும் படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் முடிவு செய்து விட்டதாகவும் அடுத்தகட்டமாக நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல் பாகத்தில் சி.பி.ஐ அதிகாரியாக வந்த நெடுமுடி வேணு இதிலும் அதே கதாப்பாத்திரத்தில் வருகிறார். கதாநாயகியாக நடிக்க நடிகை காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.


Advertisement