அப்படி மட்டும் நடந்தால்.. கண்டிப்பாக சினிமாவிலிருந்து விலகிடுவேன்! ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த நடிகை காஜல்!!

அப்படி மட்டும் நடந்தால்.. கண்டிப்பாக சினிமாவிலிருந்து விலகிடுவேன்! ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்த நடிகை காஜல்!!


kajal-agarwal-answered-to-fan-question

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர்  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

அதனை தொடர்ந்து காஜல் நடிப்பில் ஹே சினாமிகா, ஆச்சார்யா, மும்பை சாகா, இந்தியன் 2, மொசகல்லு போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு கடந்த அக்டோபர் மாதம் தொழிலதிபர் கெளதம் கிட்சிலு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்தும் காஜல் சில திரைப்படங்களிலும், வெப் சீரிஸுலும் நடித்துள்ளார்.

kajal

இந்நிலையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய காஜலிடம் ரசிகர் ஒருவர் சினிமாவிலிருந்து விலகுவது குறித்து கேட்ட நிலையில், அவர் நான் திரைப்படத்தில் நடிப்பதற்கு என்னுடைய ஒட்டு மொத்த குடும்பமும் உறுதுணையாக  உள்ளனர். அதனால் என்னால் சுலபமாக சினிமாவில் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால் எனது கணவர் கவுதம் கேட்டுக் கொண்டால் நான்  சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்வேன். ஆனால் அதுவரை ஒப்பந்தமான படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவுள்ளேன் என கூறியுள்ளார்.