காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் வீட்டில் நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்!!

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் வீட்டில் நேர்ந்த துயரம்! சோகத்தில் குடும்பத்தினர்!!


Kadhal movie director father passed away

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல படங்களை இயக்கவில்லை என்றாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்வகையில் சில தரமான படங்களைக் கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல். துவக்க கால கட்டத்தில் இவர் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து பாலாஜி சக்திவேல் கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை  இயக்கியுள்ளார். மேலும் அவர் தற்போது 'நாம் நீ நான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

Kadhal

இயக்குனர் பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல். அவர்  உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இல்லத்தில் சக்தி வடிவேலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளது. திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.