#அதிர்ச்சி : கடைசி விவசாயி பட நடிகை அடித்துக் கொலை.! இப்படி ஒரு காரணத்திற்காகவா.?!Kadaisi vivasayi movie kasammal Killed by her son

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் பலராலும் பாராட்டப்பட்ட திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அத்தையாக காசம்மாள் என்ற மூதாட்டி நடித்திருந்தார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியை சேர்ந்த காசம்மாள் விவசாய கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடைசி விவசாயி படத்தில் நடித்த நல்லாண்டிக்கு அவர் தங்கையாக அப்படத்தில் நடித்திருப்பார். 

Kadaisi vivasayi

காசம்மாளுக்கு நாமகோடி என்ற மகன் இருந்துள்ளார். திருமணமான அவர் மது போதைக்கு அடிமையாகி இருந்து வந்துள்ளார்.இதன் காரணமாக தனது மனைவியுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட 15 ஆண்டுகளாக தாய் காசம்மாளுடன் அவர் வசித்து வந்துள்ளார். 

எந்த வேலை வெட்டிக்கும் செய்யாத அவர் அடிக்கடி காசம்மாளிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு தொல்லை செய்து வந்துள்ளார். 

Kadaisi vivasayi

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் காசம்மாள் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நாமக்கோடி அவரை எழுப்பி மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு காசம்மாள் மறுத்த நிலையில் அருகில் இருந்த கட்டியை எடுத்து அவரை தாய் என்றும் பாராமல் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து நாமகோடி சென்று விட இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் வழக்கு பதிவு செய்து காசம்மாள் மகன் நாமக்கோடியை கைது செய்துள்ளனர்.