பாலிவுட்டின் பிரபல காதல் ஜோடி திருமணம் - ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண நிகழ்வு!kabir-singh-fame-bollywood-actress-ties-knot-wilith-her

பாலிவுட் சினிமாவில் பிரபல காதல் ஜோடிகளாக வளம் வந்த  சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் திருமணம் நேற்று ராஜஸ்தானில் உள்ள  ஜெய்சால்மார் என்ற இடத்தில் அமைந்துள்ள சூரியகர் என்ற ஆடம்பரமான ரிசார்ட்டில் வைத்து நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும்  திரைத்துறையைச் சார்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

bollywood

2012 ஆம் ஆண்டு வெளியான  ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தின் மூலம்  பாலிவுட்டில் அறிமுகமானவர்  சித்தார்த் மல்கோத்ரா. 2021 ஆம் ஆண்டு வெளிவந்த  ஷெர்ஷா திரைப்படத்தில் இணைந்து நடித்த போது இவருக்கும் கியாரா அத்வாணிக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்த இந்த ஜோடி நேற்று ராஜஸ்தானில் நடைபெற்ற  பிரம்மாண்டமான நிகழ்வில் திருமண வாழ்வில் இணைந்தனர்.

bollywood

இந்த நிகழ்வில்  கியாரா அத்வானியுடன்  கபீர் சிங் படத்தில் ஜோடியாக நடித்த  பாலிவுட் ஸ்டார் ஷாஹித் கபூர் அவரது மனைவி மிரா ராஜ்புத்துடன்  கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வில்  பாலிவுட் முன்னணி நடிகரான ஜான் ஆபிரகாம்  இயக்குனர் கரன் ஜோஹார், இஷா அம்பானி  மற்றும் ஜூஹி சாவ்லா போன்ற நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.  சித்தார்த் மல்கோத்ரா  நடிப்பில் மிஷன் மஞ்சு என்ற திரைப்படம்  கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

bollywood

இந்நிலையில் இந்த புதுமண ஜோடி தங்களது திருமணத்தின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் பகிர்ந்து இருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களில் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களும் நடிகைகளும் திருமணமான ஜோடிகளை வாழ்த்தி தங்களது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.