சினிமா

ஜூலிக்கு மறக்கமுடியாத நாள் இதுதானா? அப்படி யாரை சந்தித்துள்ளார் பார்த்தீர்களா??

Summary:

Julie meet gayathri and kajal

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமானவர்  ஜூலி. அதன்பிறகு, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஜூலி அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார். பின்னர், சினிமாவிலும் நடிக்க தொடங்கி சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள்  இருக்கும்போது ஜூலி அது நடவடிக்கையால் மக்களால் பெருமளவில் வெறுக்கபட்டார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது ஜூலிக்கு ஆதரவாக இருந்தவர் காயத்ரி. 

 

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, சமீபத்தில் காயத்ரி ஜூலி மற்றும் காஜல் ஆகியோர் சந்தித்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் சந்தித்த புகைப்படத்தை மறக்கமுடியாத நாள் எனக்கூறி ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 


Advertisement