லோ பட்ஜெட் சமந்தாவா! ஓ.. சொல்றியா பாடலில் செம கிளாமராக பிக்பாஸ் ஜுலி! கிறங்கடிக்கும் வீடியோ!!

லோ பட்ஜெட் சமந்தாவா! ஓ.. சொல்றியா பாடலில் செம கிளாமராக பிக்பாஸ் ஜுலி! கிறங்கடிக்கும் வீடியோ!!



julie-in-oh-soldriya-mama-song

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஜுலி. பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற அவர் நாளடைவில் தனது நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.பின்னர் அவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்க்க துவங்கியுள்ளனர்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள்  என பிசியாக இருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த புஷ்பா படத்தில் சமந்தா ஓ..சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த பாடல் தற்போது பெருமளவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பாடலை வைத்தே கிளாமராக ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் லோ பட்ஜெட் சமந்தாவா! எனக்கு கலாய்த்து வருகின்றனர்.