வாவ்.. நடிகை ஜோதிகாதானா இது.! நியூ ஹேர்ஸ்டைல், ஸ்டைலிஷ் லுக்கில் அசத்துறாரே.! புகைப்படங்கள் இதோ!!

வாவ்.. நடிகை ஜோதிகாதானா இது.! நியூ ஹேர்ஸ்டைல், ஸ்டைலிஷ் லுக்கில் அசத்துறாரே.! புகைப்படங்கள் இதோ!!


jothika-new-look-photo-viral

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த நிலையில் ஜோதிகா முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தேவ், தியா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பின்பு தொடர்ந்து கதாநாயகிகளுக்கு, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அவர் இறுதியாக உடன்பிறப்பே என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் காதல் தி கோர் என்ற படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாகவும், பாலிவுட்டில் ஸ்ரீ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகை ஜோதிகா தற்போதும் இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் உள்ளார். இந்த நிலையில் தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மிகவும் இளமையாக இருக்கும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் உண்மையிலேயே இது ஜோதிகாதானா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.