என்னது, ரஜினிக்கு ஜோடி இந்த நடிகைகளா? வெளியான புதிய தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!

என்னது, ரஜினிக்கு ஜோடி இந்த நடிகைகளா? வெளியான புதிய தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!!


Jothika, keerthi suresh axt as pair to rajini

 AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். அப்படத்தில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அதன் தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

jothikaஇந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி கார்த்தியின் சிறுத்தை, அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி மீண்டும் திரும்பியதும் அதன் படப்பிடிப்பு வேலைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

jothika

 ரஜினியின் 168 வது படத்தை எந்திரன் படத்தை தொடர்ந்து கலாநிதி மாறன் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.