தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
எனக்கு ஒருநாள் சூர்யாவை தருவீங்களா?? ரசிகையின் கேள்விக்கு நடிகை ஜோதிகா அளித்த பதிலை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் அனைவரும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு க்யூட்டாக வலம் வரும் நட்சத்திர தம்பதிகள் சூர்யா- ஜோதிகா. அவர்கள் இருவரும் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் பேரழகன், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த நிலையில் காதலில் விழுந்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
அதனை தொடர்ந்து அவர் தற்போது தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். இந்நிலையில் ரசிகை ஒருவர் அவரிடம் சமூக வலைதளப் பக்கத்தில்,' சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக ஒரு நாள் சூர்யாவை விட்டுக்கொடுத்தது போல், எனக்கும் ஒரு நாள் தருவீர்களா? நான் 16 வருடங்களாக சூர்யாவின் தீவிர ரசிகை" என கேட்டுள்ளார். அதற்கு ஜோதிகா, 'அதற்கெல்லாம் அனுமதி இல்லை' என்று ரிப்ளை செய்துள்ளார்.