பயத்துக்கே பயம் காண்பிக்கும் வில்லனை காண தயாரா?.. ஜோக்கர் படத்தின் டிரைலர் வெளியீடு அறிவிப்பு.!

பயத்துக்கே பயம் காண்பிக்கும் வில்லனை காண தயாரா?.. ஜோக்கர் படத்தின் டிரைலர் வெளியீடு அறிவிப்பு.!Joker Movie Trailer Will be Release on 10 April 2024 

 

டூட் பிலிப்ஸ் இயக்கத்தில், வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் ஜோவாகின் பீனிக்ஸ், லேடி காகா, ஜாஸி பீட்ஸ், ஸ்டீவ் கூகன், பிரெண்டன் க்ளீசன், கேத்தரின் கீனர் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ஜோக்கர் பூலி கியூக்ஸ் (Joker: Folie à Deux).

உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் கிரைம் தில்லார் படமான ஜோக்கர், 200 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் எடுக்கப்பட்டு உலகளவில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இப்படம் சர்வதேச அளவில் அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் காட்சிகள் ஏப்ரல் 9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.